ஏர் இந்தியா நிறுவனம் மூத்த மக்களுக்கு முன்னுரிமை கட்டணத்தில் 50% சலுகைகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கேள்விகளை விமான கட்டணத்தில் 50% சலுகைகளை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விமான கட்டணத்தில் base fare எனப்படும் அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையை பெற முடியும். மூத்த பயணிகள் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவு செய்யும்போது பிறந்த ஆண்டு உடன் கூடிய வாக்காளர் அடையாள, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஏர் இந்தியா வழங்கிய மூத்த குடிமக்கள் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.
இதனைப் போலவே பயணத்தின் போது குறித்த அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். இல்லை என்றால் டிக்கெட்டிற்கு முழு கட்டணம் வசூல் செய்யப்படும். இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்தால் கட்டணம் திரும்ப வழங்கப்படாது. மேலும் வரி மற்றும் இதர கட்டணங்கள் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.