Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான விக்ரம் என்பவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்துவிட்டு இரவில் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் தட்டபள்ளம் அருகே சென்ற போது விக்ரம் குறுகிய வளைவில் காரை திருப்ப முயற்சி செய்துள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக விக்ரம் உள்பட 5 பேரும் உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |