திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 50ரூபாய்க்கு 2பார்சல் பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை குடி போதையில் தாக்கிய 2ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர்.
பேரூந்துநிலையம் அருகே கலீம் என்பவர் காஜா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இங்கு குடிபோதையில் சென்ற 2ஆட்டோ ஓட்டுனர்கள் 240ரூபாயுடைய பிரியாணியை வெறும் 50ரூபாயை கொடுத்து விட்டு 2பிரியாணியை தரும்படி அதட்டலாக கூறியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்ததால் முதலில் ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் பின்னர் உரிமையாளரையும் தாக்கினர் பதிலுக்கு ஹொட்டல் உரிமையாளரும் தாக்கிய நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கோணாம்பேட்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஜெய்பாரத் மற்றும் செல்வபிரபுவை வாணியம்பாடி போலீசார் கைது செய்தனர் .