Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதல்…. 5 வயது சிறுமி பலியான பரிதாபம்…!!!

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து வயதுடைய சிறுமி உட்பட 10 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. பாலசீனத்தின் காசா முனையிலிருந்து இஸ்ரேல் படையினர் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் மேற்கொண்டதில் ஹமாஸ் அமைப்பின் பத்து நபர்கள் கொல்லப்பட்டார்கள்.

மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஐந்து வயது சிறுமியும் அவரின் தந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இது பற்றி சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்ததாவது, சிறுமியின் தாய் அழுது துடித்துக் கொண்டிருக்கிறார். ஒரே சமயத்தில், கணவரையும் குழந்தையும் இழந்து வாடுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |