Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 5 வயது சிறுவன், CRPF வீரரை கொன்ற 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை..!!

கிழக்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வாகாமா பகுதியில் இன்று நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக, இந்த பயங்கரவாதிகள் இருவரும் 5 வயது சிறுவன் மற்றும் ஒரு சிஆர்பிஎப் படை வீரரை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் டோடாவில் வசிக்கும் மசூத் அஹ்மத் பட் என அடையாளம் காணப்பட்டார். இவர், கடைசியாக எஞ்சியிருக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி என்று அழைக்கப்படுபவர்.

மேலும் ஒரு பாயங்கரவாதியை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து, ஒரு INSAS துப்பாக்கி மற்றும் பிஸ்டல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள பட்ஷாஹி பாக் பாலம் அருகே சிஆர்பிஎஃப் 90 பட்டாலியனின் சாலை திறப்பு வாயிலில் இந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் 5 வயது சிறுவன் உட்பட ஒரு படைவீரர் காயமடைந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் அனந்த்நாக் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் 5 பயங்கரவாதிகளை பிடித்துள்ளனர்.பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் போலீசார் முக்கிய பங்கு வகித்து வருவதாக ஐ.ஜி. காஷ்மீர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதை ஜூன் மாதத்தில் மொத்தம் 46 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2018 நவம்பரில் 39 பேர் அதிகபட்சமாக கொல்லப்பட்டனர். தற்போது அதைவிட அதிக எண்ணிக்கையில் இந்த மாதம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 46 பேரில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தைபா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதிகளும் உள்ளடங்கும்.

Categories

Tech |