கன்னியாகுமரியில் கடந்த 2011ம் ஆண்டு லஞ்சம் வாங்கிய வழக்கில் கனிமவளத் துறை அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இதற்கான அனுமதி சீட்டு வழங்க மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து என்பவருக்கு ரூ 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளார். இதனால் கனிம வளத்துறை அதிகாரி அப்போது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் லஞ்சம் வாங்கிய மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.