Categories
லைப் ஸ்டைல்

உங்க சின்ன ரூமை பெரியதாக்க 5 வழிகள்

முதல செய்ய வேண்டியது உங்க ரூம்ல இருக்க தேவையில்லாத பொருட்கள ஒதுக்குறது.பிறகு நீங்கள் செய்ய வேண்டிய சில ஹேக்ஸ்…

முதல செய்ய வேண்டியது உங்க ரூம்ல இருக்க தேவையில்லாத பொருட்கள ஒதுக்குறது. எப்போழுதும் ரூம்கள்ல தேவை இல்லாத பொருட்கள் தான் அதிகமாயிருக்கும். அத தான் முதல சரிப்பண்ணனும். உங்க ரூமோட பெர்ஸ்னாலிடிய கூட்டவும், பெரிய ரூமாகக் காட்டுறதுக்கும் இதோ சில வழிகள்.

லைட்டான கலர்களை சுவருக்கு தேர்தெடுங்கள்:

என்னுடைய சாய்ஸ் வெள்ளை நிறம், வெள்ளை நிறத்தை சுவருகளில் அடிப்பதால் கலர்ஃபுலான பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்.  லைட் கலர்கள் ரூமை வெளிச்சமாக காட்டுவதோடு பெரியதாகவும் காட்டும்.  டார்க் கலர்கள் ரூமை இருட்டாக காட்டும்.

பெரிய பொருட்களை பயன்படுத்துங்கள்:

சிறிய அலங்காரப் பொருட்கள்ல பயன்படுத்துவதற்கு பதில் பெரிய பொருட்கள்ல பயன்படுத்துங்க.பெரிய படுக்கைகள், பெரிய ஓவியம் , பெரிய ஃபர்னிச்சேர்கள் வீட்ட பெரியதா காட்டும்.

ஒளியை உள்ளே அனுமதியுங்கள்:

அறைக்குள் வெளிச்சம் வருவதால பாசிட்டிவ் வைபுகள் வருவதோடு ரூம் பெரியதாகவும் காட்சியளிக்கும். இது இருக்கும் இடத்தை இன்னும் பெரிதாக்கும்

விளக்குகளை அதிகமாக பயன்படுத்துங்கள்:

ஒவெர்ஹெட் லைட்டுகள் ரூமின் ஒரு பகுதிக்கு மட்டுமே வெளிச்சம் தரும். அதற்கு பதிலாக  பல விளக்குகளை ரூமின் வெவ்வேறு இடங்கள்ல வைப்பதால் வெளுச்சம் ரூம் முழுவதும் பரவி வெளுச்சத்தை தருகிறது.

ஃபர்னிச்சேர்களை டபுள் டூட்டி  செய்ய வையுங்கள்:

சோஃபாக்களை மெத்தையாக பயன்படுத்தலாம் ? மடக்கி வைத்து பயன்படுத்தும் டேபுல்கள், இரட்டிப்பு பயன்பாடுக் கொண்ட ஃபர்னிச்சேர்களை பயன்படுத்துவதால் ரூமின்  இடம் விசாலமாக தெரியும்.

Categories

Tech |