மாநிலங்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் “கடந்த 5 வருடங்களில் 19 நாடுகளின் 177 செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (இஸ்ரோ) வா்த்தக ரீதியாக வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இதன் வாயிலாக 9.40 கோடி டாலரும் (சுமாா் ரூ.778 கோடி), 4.60 கோடி யூரோவும் (சுமாா் ரூ.407 கோடி) அந்நியச் செலாவணியாகக் கிடைத்திருக்கிறது. விண்வெளி குறித்த நடவடிக்கைகளில் தனியாா் நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு உருவாக்கப்பட்ட இன்-ஸ்பேஸ் டிஜிட்டல் தளத்தில் 111 விண்வெளி புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட் அப்) பதிவுசெய்துள்ளது” என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.