தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஆதித்யா பிர்லா குடும்பத்தின் சிறப்பு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார்.
தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஆதித்யா பிர்லா குடும்பத்தினரின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் முதலீடு செய்வதற்கும் எளிதாக தொழில் புரிவதற்கும் உலகிலேயே மிகச் சிறந்த இடம் இந்தியா என்று குறிப்பிட்டார். எளிதாக தொழில் செய்வதற்கான சூழல் வாழ்க்கை தரம் உட்கட்டமைப்பு உற்பத்தி திறன் காப்பு உரிமைகளின் பிறப்பு என பல விஷயங்கள் வளர்ந்து இருப்பதாகவும் அரசு அதிகாரிகளின் தலையீடு வரி விகிதங்கள், ஊழல் போன்றவை குறைந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
தொழில் தொடங்குவதற்கு சிறந்த சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பதற்கும் இந்திய வருமாறும் அப்படி வருபவர்களை இருகரம் விரித்து வரவேற்பதற்கு தயாராக இருப்பதாகவும் மோடி கூறினார். 2016ம் ஆண்டு பாஜக அரசு குறிப்பிட்ட பொழுது இந்தியா 2 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்தது என்றும், 5 ஆண்டுகளில் அது 3 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 65 ஆண்டுகளில் 2 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக இருந்த நிலையில் ஐந்து ஆண்டுகளில் 3 பில்லியன் டாலராக உயர்த்த முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை விரைவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.