கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சரவணன்-ஸ்ரீநிதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மகாலட்சுமி, அபிராமி, அமுதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இவர் கடந்த 20 வருடங்களாக அந்த பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சரவணனுக்கு சில மாதங்களாக கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு தெரியவில்லை.
மேலும் கடன் பிரச்சனையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவரும் அவரது குடும்பமும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் போது இறப்பதற்கு முன் சரவணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.