பிறந்து ஐந்து மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தன் தாய் செய்வதை போன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
மிச்சேலே என்ற பெண் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கும் பணி செய்து வருகிறார். அவர் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை போன்று, அன்றும் தன் கைகளை தரையில் பதித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் அவரின் 5 மாத ஆண் குழந்தை படுத்திருக்கிறது.
https://www.instagram.com/reel/CdvipF8jToo/?utm_source=ig_embed&ig_rid=858c73e8-d990-4a46-8b6d-af960c2ddc78
அப்போது, தன் மகனை பார்த்துக்கொண்டே அவர் உடற்பயிற்சி செய்கிறார். அதனை பார்த்த குழந்தை, தன் கைகளை அழுத்தி கொண்டு தன் உடலை மேலெழுப்பி உடற்பயிற்சி செய்கிறது. இது பார்ப்போரை ஆச்சரியத்தில் மூழ்கச்செய்திருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள்.