ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலக்கரி சுரங்கத்தை சேர்ந்த 5 தொழிலாளர்களை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பால்க் மாகாணத்தில் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சமங்கன் மாகாணத்தின் கொத்தல் ரெகி பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைந்திருக்கிறது. அங்கு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று சுரங்கத்தினுள் மர்ம நபர்கள் நுழைந்தனர்.
அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்த தொழிலாளர்களின் உடைமைகளை திருடினர். அதன்பின்பு தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். இதில் 5 தொழிலாளிகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.