Categories
மாநில செய்திகள் வானிலை

ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வெப்பசலனம் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மற்றும் பெரம்பலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வரும் 19ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வளம் பெறக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு 11.30 மணி வரை கடல் அலைகளின் உயரம் மூன்றரை மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |