கிட்னியின் செயல் திறனை அதிகரிக்கும் ஆரோக்கியமான 5 உணவு பொருட்களின் தொகுப்பு.
சின்ன வெங்காயம்:
உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். வெங்காயத்தில் இன்சுலின் சத்து உள்ளதால் சர்க்கரை அளவானது கட்டுப்படுத்தும். எனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பை தடுத்து,சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க முடியும்.
முட்டைக்கோஸ்:
முட்டைக்கோஸில் வைட்டமின் “கே”, வைட்டமின் “பி”, வைட்டமின் “பி6”, போலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு இது சக்தி வாய்ந்த உணவாக திகழ்கிறது. எனவே வாரத்தில் இரண்டு முறையாவது முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வருவது நல்லது.
சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை ஜூஸாக சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் இரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும். மேலும் சிறுநீரக கற்கள் வராமல் பாதுகாக்கலாம். இதன் சாறுடன் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.
முட்டையின் வெள்ளைக்கரு:
முட்டையின் வெள்ளைக் கருவை புரதத்தின் அரசன் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் முக்கிய அமினோ அமிலங்கள் அதிகமாகவும், பாஸ்பரஸ் குறைவாகவும் உள்ளதால் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
பூண்டு:
சிறுநீரக நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் சூடோமோனாஸ்,ஏறெஜினோசா எனும் நோய்க் கிருமிகளை தடுத்து நோயை குணப்படுத்தும் தன்மை பூண்டில் உள்ளது.எனவே தினமும் ஒரு பூண்டு சாப்பிடுவது நல்லது. ஆனால் பூண்டை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிட்டால் அதன் முழுமையான பயனையும் பெற முடியும்