Categories
உலக செய்திகள்

“இப்போ தான் முதல் முறையா ஊரடங்கு!”…. எந்த நாட்டில் தெரியுமா….? 5 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!!

டோங்கா நாட்டில் முதல்முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

டோங்கா நாடு, கொரோனா பாதிப்பிலிருந்து தப்பித்த ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருந்தது. இங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். எரிமலை வெடிப்பால் பாதிப்படைந்த இந்நாட்டில் தற்போது 5 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு முதல் தடவையாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

உலகில் அதிகமான நாடுகள் கொரோனாவுடன் போராடி கொண்டிருந்தாலும், ஒரு சில நாடுகளில் தற்போதும் கொரோனா தொற்று இல்லை. இதில் டோங்கோ, நாடும் இருந்தது. கடந்த 2020-ஆம் வருடம் மார்ச் மாதம் உலக நாடுகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன் டோங்கோ, பிற நாடுகளுடனான தங்கள் எல்லைகளை அடைத்துக் கொண்டது. இதனால் அந்நாட்டில் குரலும் பரவாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |