Categories
தேசிய செய்திகள்

5.8 கிலோ எடை… அதிக எடை கொண்ட குழந்தையை பெற்றெடுத்த…. அசாம் பெண் சாதனை…!!

அசாம் மாநிலத்தில் ஒரு மருத்துவமனையில் 5.2 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அசாம் மாநிலம் சச்சர் என்ற மாவட்டத்தை சேர்ந்த பட்டல் தாஸ் என்பவரின் மனைவி ஜெயா. இவர் இரண்டாவதாக கர்ப்பம் தரித்தார். ஜெயாவிற்கு பிரசவ தேதி மே 29 ஆகும். ஆனால் கொரோனா காரணமாக ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்து வந்துள்ளனர். பின்னர் வேறு வழியின்றி மே 15ஆம் தேதி சத்ந்திரா மோகன் மருத்துவமனைக்கு ஜெயாவை அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு பெண் கர்ப்பம் ஆனதை அடுத்து 38 முதல் 42 வாரங்களுக்குள் குழந்தை பிறக்க வேண்டும். ஆனால் ஜெயாவுக்கு சற்று தாமதம் ஆனதால் உறவினர்கள் அனைவரும் மிகவும் பயந்தனர்.

இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்தனர். பின்னர் நல்லமுறையில் சிசேரியன் நடைபெற்று, ஜெயா குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த குழந்தை 5.2 கிலோ எடை இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொதுவாக பிறக்கும் குழந்தைகள் 2 கிலோ முதல் 4 கிலோ வரை இருக்கும். ஆனால் இந்த கிலோ 5.2 கிலோ எடை இருந்து புதிய ரெக்கார்டை படைத்துள்ளது. இவருக்கு பிறந்த முதல் குழந்தை 3.8 கிலோ எடை இருந்தது குறிப்பிடதக்கது. தற்போது ஜெயாவும் அவரது குழந்தையும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |