கேரளாவின் பேக்கல் காவல் நிலையம் ஐந்து நட்சத்திர (5 ஸ்டார் ) `விடுதியின் தரத்தில் ரூ.10 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது காண்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
காசர்கோடு – கன்ஹன்கட் மாநில நெடுஞ்சாலையின் த்ரிகுன்னத்து எனுமிடத்தில் பேக்கல் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் அனைத்து விதமான சொகுசு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
உயர்தர ஐந்து நட்சத்திர விடுதியின் தோரணையில் காவல் நிலையத்தின் உள்வேலைபாடுகள் அமைந்துள்ளது. இங்கு சொகுசான இருக்கைகள், உயர்தர கழிப்பிட வசதிகள், வண்ண ஒளி விளக்குகள், புத்துணர்வு தரும் செடிகள் என அனைத்தும் உயர்தரத்தில் இங்கு அமைப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்கள் எந்தஒரு இன்னல்களையும் சந்திக்கக்கூடாது, அவர்கள் மனதில் எவ்விதமான பதற்றத்தையும் உணரக்கூடாது என்பதற்காகவே இம்மாதிரியான வேலைபாடுகளை நிறுவியதாக காவல் நிலையத்தில் உயர் அலுவலர் தெரிவித்தார்.