Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5 விக்கெட் எடுக்க காரணமே இதுதான்…. “அந்த 2 போட்டில அது கெடைக்கல”…. போட்டிக்கு பின் ‘ஸ்விங் கிங்’ புவி பேசியது என்ன?

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசியதற்கான காரணத்தை கூறியுள்ளார் புவனேஸ்வர் குமார்..

ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் துபாயில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. விராட் கோலி 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 122* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.. மேலும் கேப்டன் கே.எல் ராகுல் 62 ரன்கள் எடுத்தார்..

இதையடுத்து 213 ரன்களை நோக்கி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர்.. இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் புவனேஸ்வர் குமார் விசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதனை தொடர்ந்து மீண்டும் புவனேஸ்வர் குமார் வீசிய  3ஆவது ஓவரில் கரீம் ஜனத் 2, நஜிபுல்லா ஸத்ரான் 0 ரன்களில் இருவரும்  ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் 3 ஓவரில் 9/4 மட்டுமே எடுத்து தடுமாறியது. அதன் பின் அர்ஷ்தீப் சிங் வீசிய 6ஆவது ஓவரில் முகமது நபியும் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின் மீண்டும் புவனேஸ்வர் குமாரின் அடுத்த ஓவரில் அஸ்மத்துல்லா உமர்சாய் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின் வந்த ரஷீத் கான் 15, முஜீப் உர் ரகுமான் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் இப்ராகிம் சத்ரான் மட்டும்  64 (59) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.. பரீத் அகமது 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்.. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் 1 எக்கனாமியில் வெறும் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி பல்வேறு சாதனைகளை படைத்தார்..

முன்னதாக நடந்த சூப்பர்4 சுற்றில் 19 ஆவது ஓவரில் எதிரணிகளுக்கு (பாகிஸ்தான், இலங்கை) 25 மற்றும் 19 ரன்கள் தேவைப்பட்டபோது, 19 மற்றும் 14 என ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்த புவனேஸ்வர் குமார் கடும் விமர்சனங்களை சந்தித்த வேளையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  சிறப்பாக பந்து வீசியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசியது குறித்து புவனேஸ்வர் குமார் பேசியதாவது, எனக்கான நாளாக இன்றைய நாள் அமைந்ததால் பவர்பிளே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்தேன். பொதுவாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிகளவில் பந்து ஸ்விங் ஆகாது.. ஆனால் இன்றைய ஆட்டத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. எனது பந்துவீச்சில் நன்றாக ஸ்விங் கிடைத்தால் எங்கு பந்து வீசினாலும் விக்கெட்டுகளை எடுப்பேன்.. எனவே எனக்கு இந்த போட்டியில் நிறைய விக்கெட்டுகள் கிடைத்தது.. கடைசி 2 போட்டிகளில் (பாகிஸ்தான், ஸ்ரீலங்கா) நான் சிறப்பாக பந்து வீசவில்லை..

ஏனெனில் அந்த போட்டியில் எனக்கு தேவையான அளவு பந்து ஸ்விங் ஆகவில்லை.. ஆனால் இன்றைய போட்டியில் எதிர்பார்க்காத அளவிற்கு பந்தில் நல்ல ஸ்விங் இருந்ததால் எனக்கு விக்கெட்டுகள் கிடைத்து இருக்கிறது. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.. ஒட்டு மொத்தமாக இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்த தொடர் மிகவும் உதவும் என்று அவர் கூறினார்..

Categories

Tech |