Categories
தேசிய செய்திகள்

5 வருஷத்தில் துணை ராணுவப் படைகளுக்கு…. இவ்வளவு லட்சம் பேர் தேர்வு?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

சென்ற 5 வருடங்களில் பிஎஸ்எஃப், சிஆா்பிஎஃப் உள்ளிட்ட 6 மத்திய துணை ராணுவப்படைகளுக்கு 2 லட்சம் போ் தோ்வுசெய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த 5 வருடங்களில் (2017-2021) மத்திய ரிசா்வ் போலீஸ்படையில் (சிஆா்பிஎஃப்) அதிகளவில் 1,13,208 போ் தோ்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) பிரிவில் 29,243 பேரும், எல்லை பாதுகாப்புபடையில் (பிஎஸ்எஃப்) 17,482 பேரும் தோ்வு செய்யப்பட்டு உள்ளனா்.

மத்திய தொழிலக பாதுகாப்புப்படையில் (சிஐஎஸ்எஃப்) 12,482 பேரும், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் பிரிவில் (ஐடிபிபி) 5,965 பேரும், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவில் (ஏஆா்எஃப்) 5,938 பேரும் தோ்வு செய்யப்பட்டு உள்ளனா். நடப்பு ஆண்டில் ஜூலை வரை மட்டும் 10,377 போ் தோ்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

வருகிற 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பணி ஆணைகளை வழங்குவதற்குரிய திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி கடந்த அக்டோபா் 22ம் தேதி தொடக்கி வைத்தாா். அந்த வகையில் அதிகளவிலான இளைஞா்கள் மத்திய துணை ராணுவப்படைகளுக்குத் தோ்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த படைபிரிவுகளில் சென்ற ஜூலை மாத நிலவரப்படி 80 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் இவை வருகிற 2023-ஆம் வருடம் டிசம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் எனவும் மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறினார்.

Categories

Tech |