உலக அளவில் 5 ஆண்டு காலத்தில் ஆயுதங்கள் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
சுவீடனின் ஸ்டாக்கோமில் உள்ள பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி மையம் 2017ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான ஆயுதங்கள் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் உலக அளவில் அமெரிக்கா 39%, ரசியா 19%, பிரான்ஸ் 11%, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் 41/2% பங்கை கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சவுதி அரேபியா 11% பங்கை கொண்டுள்ளது. மேலும் இதற்கு அடுத்த இடங்களில் எகிப்து, ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளும் உலக ஆயுதங்கள் இறக்குமதியில் உள்ளன. இந்த நிலையில் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் 7,66,000 கோடி ரூபாய் அளவில் உலக வணிகம் நடைபெறுவதாகவும் தெரிவிஇக்கப்பட்டுள்ளனர்.