Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுவன் கொடூர கொலை…. கொலைகாரனை உயிருடன் எரித்த மக்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

அசாம் மாநிலமான திப்ருகர் மாவட்டத்தில் வசித்து வந்த 5 வயது சிறுவனை, மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூரைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். அதாவது நடந்து என்னவென்றால் உஜ்ஜல் முரா என்ற 5-வயது சிறுவன் சக சிறுவர்களுடன் சேர்ந்து சுனித் தந்தி என்பவருடைய வீட்டின் வளாகத்திற்குள் விளையாடிக் கொண்டு கொண்டிருந்தான். அப்போது திடீரென்று கோபமடைந்த சுனித் விளையாடிக் கொண்டிருந்த உஜ்ஜல் முராவை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதில் சுனித் தந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உள்ளூர் வாசிகள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சிறுவனை கொலை செய்ததை அறிந்த உள்ளூரைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுனித் தந்தியை உயிருடன் எரித்து கொன்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் மற்றும் சுனித்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |