5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 27 நாட்களில் மரண தண்டனை வழங்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு என்ற பகுதியில் கடந்த மாதம் 19ம் தேதி 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த இளைஞன்தான் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணை நிறைவடைந்து குற்றவாளி இவர்தான் என நீதிபதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இது ஒரு கொடூரமான குற்றம். விசாரணையின் போது அவர் செய்த செயலுக்காக வருந்திய கூட தெரியவில்லை. அப்படிவருந்தி இருந்தால் உங்களுக்கு தண்டனை வேறு மாதிரி இருந்திருக்கும் என்று நீதிபதி கூறினார். இவ்வாறு விரைவாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டதால் அனைத்து தரப்பினரும் நீதிபதிக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.