Categories
மாநில செய்திகள்

5 வது நாளாக தொடரும் கடல் சீற்றம்…. முடங்கிய மீன்பிடித்தொழில்…. வருத்தத்தில் மீனவர்கள்…. !!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், மூட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாகக் கொண்டு 1000 க்கும் மேற்பட்ட விசைப் படகு மற்றும் 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் பைபர் படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் நிலவிவரும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மீனவர்கள் வரும் 3 நாட்களுக்கு லட்சத்தீவு மற்றும் கேரளா கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்ததனர். அதனை தொடர்ந்து 5வது நாளாக இன்று குளச்சல், மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 4000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |