முதியோர் ஓய்வூதியம் வழங்கியது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக சமுதாய வளைகாப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வரவேற்றார். இவ்விழாவில் பலர் கலந்து கொண்டார்கள். இதில் 150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் 21 லட்சம் மதிப்பீட்டில் 143 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும் இலவச வீட்டு மனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது, வீட்டில் வளைகாப்பு நடத்த முடியாத கர்ப்பிணிகளுக்கு முதல்வரின் அறிவுரையின்படி வளைகாப்பு மற்றும் சீதன பொருட்களை வழங்குகின்றோம். ஆண்களை விட பெண்கள் தான் அணைத்து போட்டுகளிலும் வெற்றி பெறுகின்றார்கள். இதுவரை முதியோர் ஓய்வூதியம் மட்டும் 4 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக முதியோர் ஓய்வுதியும் வாங்கியவர் பலரை நீக்கப்பட்டதாக புகார்கள் வந்ததை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து தகுதியுடைய அனைவருக்கும் முதியோர் ஓய்வு ஊதியம் கிடைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருக்கின்றோம் என பேசியுள்ளார்.