உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பில்கேட்ஸ். இவரைப் பற்றி கட்டாயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியது இவர்தான். பில்கேட்ஸ் ஒருநாள் சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்திற்கு சென்று உள்ளார். அங்கு அவர் சாப்பிட்டு முடித்தவுடன் அவர் சாப்பிட்டதற்குரிய பில் 500 டாலர் வந்துள்ளது. அந்த 100 டாலரை அவர் செலுத்திவிட்டு அவருக்கு சாப்பாடு பரிமாறி ஊழியருக்கு 5 டாலர்கள் டிப்ஸாக வழங்கியுள்ளார். அந்த ஊழியர் என்ன இவர் வெறும் 5 டாலர்கள் மட்டும் கொடுக்கிறார் என்று பார்த்துள்ளார். அதனை கவனித்த பில்கேட்ஸ் என்னவென்று அந்த ஊழியரிடம் கேட்டார்.
அதற்கு அந்த ஊழியர், சிறிது நேரத்திற்கு முன்புதான் உங்களுடைய மகள் இங்கு வந்து உணவு சாப்பிட்டார். அவர் உங்களைப் போலவே 500 டாலர்களுக்கு சாப்பிட்டார். ஆனால் எனக்கு டிப்ஸ் மட்டும் 500 டாலர்கள் கொடுத்தார். ஆனால் அவருடைய அப்பா அதுமட்டுமல்லாமல் இந்த உலகத்திலேயே கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் நீங்கள் வெறும் 5 டாலர்கள் கொடுக்கிறீர்கள் என்று கூறினார். அதற்கு பில்கேட்ஸ் சிரித்துக்கொண்டே, நீங்கள் சொல்வது சரிதான். அந்தப் பெண்ணின் அப்பா ஒரு கோடீஸ்வரர், அதனால்தான் அந்தப் பெண் உங்களுக்கு 500 டாலர்கள் கொடுத்தார்.
ஆனால் என்னுடைய அப்பா ஒரு மரம் வெட்டுபவர்,பணத்தின் அருமை எனக்கு என்னவென்று நன்றாக தெரியும். அதனால்தான் நான் உங்களுக்கு வெறும் 5 டாலர்கள் டிப்ஸாக கொடுத்தேன் என்று கூறினார். இதனைப் போலவே பெரும்பாலானோர் அப்பா அம்மாவிடம் வாங்கும் பணத்தை தங்கள் இஷ்டத்திற்கு செலவு செய்கின்றனர். ஆனால் அதை அவர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தார்கள் என்பதை யாரும் நினைப்பதில்லை.