Categories
தேசிய செய்திகள்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் எப்போது?… இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அறிவிப்பு..!!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்..

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநில பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம்..

தேர்தல் ஆணையம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொண்டு வந்தது.. தேர்தல் ஆணையர்கள் 5 மாநிலத்திற்கும் நேரில் சென்று அங்குள்ள கள நிலவரம் என்ன? என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும்  கண்டறிந்து உள்ளனர்.. இத்தகைய நிலையில் தான் இன்று தேர்தல் தேதியை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..

Categories

Tech |