இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சார்பில் 5 நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நாக்-அவுட் முறையில் இந்திய பல்கலைக்கழகங்களில் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்தப் போட்டி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் சுவாமிநாதன் , விளையாட்டு பல்கலைக்கழகம் துணைவேந்தர் சுந்தர், ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 53 அணிகளில் 800 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணி 28-22 எந்த புள்ளி வித்தியாசத்தில் கர்நாடக பல்கலைக்கழக அணியையும், ஆந்திரா பல்கலைக்கழகம் அணி 40-30 என்ற புள்ளி வித்தியாசத்தில் மகாராணி கிளஸ்டர் பல்கலைக்கழக அணியும், ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழக அணி 23-9 எந்த புள்ளிகள் வித்தியாசத்தில் நுருள் இஸ்லாம் பல்கலைக்கழக அணியையும், அண்ணா பல்கலைக்கழக அணி 34-32 இந்த புள்ளிகள் வித்தியாசத்தில் ராயல்சீமா பல்கலைக்கழக அணியையும், உஸ்மானியா பல்கலைக்கழக அணி 40-32 எந்த புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.