புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஓட்டு எண்ணிக்கை உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்கள் உள்ளிட்ட ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கும், மே இரண்டாம் தேதி முதல் மறுநாள் 3ஆம் தேதி மாலை 4 மணி வரை அனைத்து மதுபான கடைகள், பார்கள், சாராயக்கடைகள் மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.