ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி, ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறமும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் இருக்கும் ரோஜா பூங்கா, மோர் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா, குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் குதிரை சவாரி, படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.