Categories
உலக செய்திகள்

5 ஆண்டுகள் வரை கட்டாயமாக சிறை…. போலி ஆவணத்தை தயாரிக்கும் பிரான்ஸ் மக்கள்….!!

பிரான்சில் 140 முதல் 350 யூரோக்கள் வரை செலவிட்டு சிலர் கொரோனா குறித்த போலி சுகாதார ஆவணத்தை பெறுகிறார்கள்.

பிரான்சில் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டவர்களுக்கும், கொரோனா குறித்த பரிசோதனையில் நெகட்டிவ் என்ற முடிவு வந்தவர்களுக்கும் அந்நாட்டின் அரசாங்கம் சுகாதார பாஸ் என்னும் ஆவணத்தை கொடுக்கிறது. மேலும் இந்த சுகாதார ஆவணம் இருந்தால்தான் ரயில்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையையும் பிரான்ஸ் அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசியை பெற விரும்பாத சிலர் சட்டத்திற்கு புறம்பாக சுமார் 140 முதல் 350 யூரோக்கள் வரை செலவிட்டு போலியாக சுகாதார ஆவணத்தை பெறுகிறார்கள். இவ்வாறு போலியாக சுகாதா ஆவணத்தை உருவாக்குபவர்களுக்கு 1,50,000 யூரோக்கள் அபராதமும், சுமார் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

Categories

Tech |