எல்ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் இந்த சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் 5g சேவையை நீங்கள் பெற உங்கள் சாதகமாகன மொபைல் இருக்க வேண்டும் இல்லை என்றால் 5ஜி நெட்வொர்க் பெறுவது சிரமமாகும். அதனால் இந்தியாவில் 5g ஃபோனை வாங்குகின்றீர்கள் என்றால் சில அடிப்படையான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது இது ஒரு எளிய விஷயமாக தோன்றலாம் ஆனால் 5ஜி போனில் 5ஜி சிப்செட் இருக்க வேண்டும். Qualcomm மற்றும் mediatek போன்றவை 5g ஃபோன்களில் தங்கள் சிப்செட்டுகளை வழங்குகிறது. அதனால் நீங்கள் வாங்க விரும்பும் தொலைபேசியை இயக்கும் hardware ஐ சரி பார்க்கவும் உதாரணமாக ஸ்னாப்டிராகன் 480 என்பது பைவ் ஜி செட் ஆகும். அதே சமயம் ஸ்னாப்டிராகன் 680 4g ஆதரவு கொண்டது இதே போல் மீடியா டெக் அதன் பெரும்பாலான டைமண்ட் சிட்டி சிப்செட் 5ஜி ஆதரவை வழங்குகிறது.
5 ஜி பேண்டுகள்
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்களை உங்கள் போன் ஆதரிக்கும் என்பதை உறுதிப்படுத்தும் 5ஜி பான்டுகளின் தொகுப்பு பற்றி நீங்கள் தெரிந்திருப்பீர்கள். இந்த விவரங்களில் பெரும்பாலானவை நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் பகிர்ந்து கொள்கிறது. மேலும் உங்களுக்கு விருப்பமான போன் 5ஜி பான்களை ஆதரிப்பவையா என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும்.
5ஜி அப்டேட்
கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சில ஃபோன்கள் ஐ ஜி ஆதரிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் நெட்வொர்க்கை செயல்படுத்த 5g புதுப்பிப்பு தேவை. ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்றவை நாட்டில் இன்னும் 5ஜியை ஆதரிக்காத சில பிராண்டுகள் ஆனால் அவற்றின் புதுப்பிப்புகள் வரும் மாதங்களில் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் பட்ஜெட் பிரிவிற்கு 5g ஆதரவுக்காக வெளியிடப்படும் எந்த புதுப்பிப்புகளும் நிறுவனத்தின் இணையதளத்தை பார்க்கலாம்.
பெரிய பேட்டரி அவசியம்.
5ஜியானது உங்கள் டேட்டா பேண்ட் வித் மற்றும் உங்களின் போனின் பேட்டரியை காலி ஆகிவிடும் அதனால் குறைந்தபட்சம் 5,000 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்ட ஒரு போனை நீங்கள் தேர்வு செய்வது மிகவும் அவசியமாகும் மேலும் வேகமான சார்ஜிங் ஆதரவை வழங்கும் ஃபோனை நீங்கள் வாங்க வேண்டும்.