இந்தியா கடந்த 48 ஆண்டுகளுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வான்வழித் தாக்குதலை நடத்தி வெற்றி கண்டது.
புதுடெல்லி 1971 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பின் தற்போது இந்தியாவில் 2019 பிப்ரவரி 26-ஆம் தேதி முதன்முறையாக பாலக்கோட்டில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் -இ -முகம்மதுவின் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இந்த விமானத் தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகள் இன்று நிறைவடைந்தது. இதில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த பயங்கர தாக்குதலில் பரிதாபமாக கொல்லப்பட்டு உயிரிழந்தனர்.
மேலும் எல்லை கட்டுப்பாடுகளை தாண்டி அமைக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ் – இ- முகமது பயங்கரவாத முகாம்களை 2019 பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று 3:30 மணியளவில் 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து முகாம்களை அழித்தது. இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல் இனி நடந்தால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று யூரி மற்றும் பாலக்கோட் வான்வழி தாக்குதல் போன்றவை பாகிஸ்தானுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தது.
பாலக்கோடு வான்வழி தாக்குதல் தொடர்பாக சில முக்கிய விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. இந்தியாவின் ‘ஆபரேஷன் பந்தர்’ எனக் குறியீட்டு பெயர் பாலக்கோட்டில் விமானப்படையின் நடவடிக்கை ரகசியத்தைக் காப்பதற்காக இந்தியாவின் ஏழாவது மற்றும் ஒன்பதாவது படைப்பிரிவுகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் கணவாய் மீது கார் மோதி நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 42 மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஜவான்கள் உயிரிழந்தனர்.
இதனால் 2019 பிப்ரவரி 14 ஆம் ஆண்டு புல்வாமா பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பதிலடி கொடுக்கும் விதமாக பால்கோட் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. பாலக்கோடு விமானத் தாக்குதலுக்கு மிராஜ் 2000 மற்றும் சுகோய் எஸ்யூ -30 விமானப்படைகள் பயன்படுத்தப்பட்டன. முக்கிய விமானப்படை குவாலியர் தளத்திலிருந்து பறந்து 12 மிராஜ் 2000 விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா போர் விமானங்கள் பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாமை தகர்த்து எறிந்தனர் .இதனால் 250 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சரமாரியாகக் கொல்லப்பட்டனர்.