Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…. ஒருநாள் கூட கூடுதல் அவகாசம் கிடையாது…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9ஆம் ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது . அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பணியில்  ஈடுபட்டுவருகின்றன. மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் தொடர்பாக   எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் தேர்தலை விரைவாக நடத்தவதற்கு மனு தாக்கல் செய்யப்பட்டியிருந்தது. உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் காலம் வேண்டும் என்று  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி ரமணா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் நடந்து கொள்கிறீர்கள் என்று தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

ஏற்கனவே தேர்தலை நடத்த 3 மாத அவகாசம் வழங்கப் பட்ட நிலையில் இதற்கு மேல் ஒரு நாள் கூட கூடுதல் அவகாசம் வழங்கப்பட முடியாது என்று அவர் தெரிவித்தார். மேலும்  தேர்தலை எவ்வளவு குறைந்த நாட்களில் நடத்த முடியும் என்பது பற்றி ஒரு பிரமாணப் பத்திரத்தை 2 நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு தலைமை நீதிபதி ரமணா  உத்தரவிட்டார்.

Categories

Tech |