Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று 46 பேர் குணமடைந்துள்ளனர்…. மொத்த எண்ணிக்கை 457ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது.

கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457ஆக அதிகரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மலிவான அரசியலை ஸ்டாலின் கைவிட வேண்டும். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. எதிர்க்கட்சித்தலைவர் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |