கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சீனாவில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 46 பேரும் சொந்த ஊர் திரும்பினர்.
கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் 259_ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் 11,791 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கல்வி , பணிநிமித்தம் என சீனா சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த 29 பேர் ஒரே நாளில் சொந்த ஊர் திரும்பினர். கொரோனா வைரஸ் பரவுவதால் சீனாவில் இருந்து 4 நாட்களில் 46 பேர் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். 46 பேருக்கும் விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.