ஒருவரது தோற்ற பொலிவில் முக அழகும் பெரிதும் கவனம் ஈர்க்கப்படுகிறது அதற்கு தலைமுடியும் பெரும் பங்கு வகித்து வருகிறது. சீராக வாரப்பட்ட தலைமுடி ஒருவரின் நல்ல பண்பை வெளிப்படுத்துகின்றது. இந்த தலைமுடியை அழகு படுத்துவதும் கூட ஒரு கலையாக கருதப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் இளம்பெண்கள் பலர் முடிகளை வைத்து வகை வகையான அலங்காரம் செய்து தங்கள் அழகை மெருகேற்றி வருகின்றார்கள். இந்த சூழலில் கிரேக்க நாட்டின் ஏதேன்ஸ் நகரை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் கான்ஸ்டன்டினோஸ் கொடோபிஸ் என்பவர் கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது அவர் தலை முடியை வைத்து அப்படி என்ன செய்து விட்டார் என கேட்கின்றீர்களா? ட்ரிம்மர் உதவியுடன் விரைவாக முடிவெட்டி சாதனை படைத்திருக்கிறார். இதற்கு இவர் எடுத்துக் கொண்டது 47.17 வினாடிகளே ஆகும். இதனை செய்து முடித்ததும் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நீதிபதிகள் வருகின்றார்கள். அவர்கள் முடிவெட்டி கொண்டவரின் தலைமுடியின் நீளம் பற்றி அளந்து கொண்டார்கள் அதன் பின் முறையாக பணி முடிந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கான்ஸ்டன்டினோசின் பெயர் கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் இது பற்றிய வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு விரைவாக முடிவெட்டுக் கொள்ள விரும்புகின்றீர்களா 45 வினாடிகளில் முடிவெட்டுக் கொள்ளலாம் வருகின்றீர்களா என அதற்கு தலைப்பும் பதிவிட்டு இருக்கிறார்.