Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. தண்ணீருக்காக 44 பேர் கொல்லப்பட்ட கொடூரம்…. 1 லட்சம் மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம்….!!

வடக்கு கேமரூனில் தண்ணீருக்காக இரு தரப்பு மக்கள் சண்டையிட்டதில் 1 லட்சம் நபர்கள் அகதிகளாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் கூறியிருக்கிறது.

வடக்கு கேமரூனில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீருக்காக சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், 40 நபர்கள் கொல்லப்பட்டதுடன், 100க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அங்கு போராட்டங்கள் நடைபெறுவதால், சுமார் 1 லட்சம் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, Chad என்ற பக்கத்து நாட்டில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தங்குமிடம், சுகாதாரக்கருவிகள் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |