கேரள மாநிலம் பீர்மேடு நகரில் வசிப்பவர் கிருஷ்ணபிரசாத். இவரது சகோதரி கிருஷ்ணப்ரியா. இவர் திருமணமாகி முண்டகாயம் கிராமத்தில் வசிக்கிறார். சர்வதேச சகோதரர்கள் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணப்ரியா தன் அண்ணனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். தங்கையிடமிருந்து பரிசு தான் வந்திருக்கிறது என நினைத்த கிருஷ்ணபிரசாத்க்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
கிருஷ்ணப்ரியா பிறந்தது முதல் இருவரும் வளர்ந்த, இருவருக்குள்ளும் நிகழ்ந்த சண்டை, செலுத்திய அன்பு என 5 கிலோ எடையும், 434 மீட்டர் நீளமும் கொண்ட அந்தநீண்ட கடிதத்தில் எழுதியிருந்தார். இதைஅடுத்து, கொல்கத்தாவில் உள்ள ‘யுனிவர்சல் ரிக்கார்ட் போரம்’ என்ற நிறுவனத்துக்கு, தங்கை தனக்கு எழுதிய கடிதத்தை அனுப்பினார். 12 மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்ட இந்த நீண்ட கடிதம் ‘உலக சாதனை’ என அந்நிறுவனம் சான்றளித்து உள்ளது