உத்தரப் பிரதேசத்தில் பெண் புலியை அடித்து கொன்றதாக 43 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பனிபட் மாவட்டத்தில் உள்ள மதானி என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை காலை ஊருக்குள் புகுந்த பெண்புலி ஒன்று பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கம்பு மற்றும் கம்பிகளால் அந்த புலியை தாக்கியுள்ளனர். புலி தாக்க படுவதை வீடியோ எடுத்த ஒரு சிலர் அதனை உடனே சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதை பார்த்த வனத்துறையினர் புலிகளை கொடூரமாக தாக்குவதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் தாக்குதலை தடுக்க முயன்று போது , புலி இறக்கும் வரை கிராம மக்கள் வனத்துறையினரை அருகில் விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் பெண்களை கொடூரமாக தாக்கி கொன்றதாக 43 பேர் மீது உத்தரபிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.