விவசாயி ஒருவர் திருமணம் நடக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி வடக்கு அஹ்ரகாரத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் விவசாயியாக உள்ளார். இவருக்கு 46 வயதாகிறது. பல இடங்களில் பெண் பார்க்கப்பட்டது. ஆனால் திருமணம் நடைபெறவில்லை. 46 வயது ஆகியும், திருமணம் நடக்காததால் மனமுடைந்த அவர் சம்பவ தினத்தன்று குடும்பத்தினரிடம் கூறி விட்டு வயலுக்கு சென்றார்.
இரவு ஆகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை வயலுக்கு தேடி சென்றனர். அங்கு ராமன் குளத்துக் கரையில் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.