41 பல்கலைக்கழகங்கள், உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லா பணியிடங்களை தோற்றுவித்தும் அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் இந்த கல்லூரிகளில் பணியாற்றும் பத்தாயிரம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் அந்தந்த மண்டல இயக்குனர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைப் போலவே அந்தந்த கல்லூரிகளில் இருக்கக்கூடிய தற்காலிக பணியிடங்களை எப்படி நிரப்புவது என்பது குறித்து பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனைப் பின்பற்றி வரும் காலங்களில் முழுமையாக செயல்படுத்துவதற்கான ஒரு விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.