Categories
சினிமா தமிழ் சினிமா

40,000 பாடல்களுக்கு சொந்தக்காரர்… கமலுக்காக ஒரு பாடலையும் பாடலயா… வெளியான புது தகவல்..!!

40 ஆயிரம் பாடல்கள் கடந்த 25 ஆண்டுகளில் கமலுக்காக ஒரு பாடல் கூட பாடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அந்த வழியில் தவறாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை பயணித்து 40,000 பாடலுக்கு சொந்தக்காரரான எஸ்பிபி அவர்கள், கமலஹாசனுக்கு கடைசியாக அவ்வை சண்முகி படத்தில் மட்டும் பாடலைப் பாடி இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான், பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அவரது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் எஸ் பி பி யுடன் தமிழ் சினிமாவில் நெருக்கமாகப் பழகிய நடிகர் என்றால் அது கமல் தான். அது மட்டுமில்லாமல் கமலுக்காக தெலுங்கு படங்களில் டப்பிங் செய்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம் தான். 80 களிலும், 90களிலும் கமலுக்காக நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ள எஸ்பிபி 1995 ஆம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படத்தில் தான் கடைசியாக பாடியுள்ளார்.

25 ஆண்டுகளாக அவர்கள் எந்த ஒரு பாடலையும் பாட வில்லை. 2003 ஆம் ஆண்டு வெளியான அன்பே சிவம் படத்தில் ஒரு பாடலை பாடி இருந்தாலும், அது படத்தில் இடம் பெறவில்லை. இதற்கெல்லாம் காரணம் கமலே. ஒரு கட்டத்தில் பாடகராக மாறி எல்லா படங்களிலும் பாடல்களை அவரே பாடியதால் எஸ்பிபி அவர் படத்தில் பாடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |