சியோமியின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம், தன் ரெட்மிபுக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் இ-லெர்னிங் எடிஷன் லேப்டாப்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மிபுக் ப்ரோ – வெளியான இரண்டு லேப்டாப்களில் விலை உயர்ந்த மாடல் ஆகும், மேலும் இதன் எடை வெறும் 1.8 கிலோ மற்றும் தடிமன் வெறும் 19.9 மிமீ மட்டுமே உள்ளது. இது இன்டெல் 11த் ஜென் கோர் i5 ப்ராசஸர் உடன் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் உடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள RedmiBook E-Learning எடிஷன் ஆனது இன்டெல் கோர் i3 மற்றும் 512GB SSD ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
ரெட்மிபுக் ப்ரோ – சிங்கிள் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.49,999
ரெட்மி நிறுவனம் எச்டிஎப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ.3,500 தள்ளுபடியை வழங்குகிறது, இதன் மூலம் குறிப்பிட்ட லேப்டாப்பின் விலையை ரூ.46,499 ஆக குறைக்கலாம்.
8 ஜிபி + 256 ஜிபி மாடல் – ரூ.41,999
8 ஜிபி +512 ஜிபி மாடல் – ரூ.44,999
இதற்கு எச்டிஎப்சி பேங்க் கார்டுகள் மூலம் ரூ.2500 தள்ளுபடி கிடைக்கும். ஆக அந்தந்த விலைகளை ரூ.39,499 மற்றும் ரூ.42,499 ஆகக் குறைக்கலாம். RedmiBook Pro மற்றும் E-Learning Edition லேப்டாப்கள் ஆனது Flipkart, Mi Home மற்றும் Mi.com வலைத்தளங்கள் வழியாக வாங்க கிடைக்கும் மற்றும் முதல் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடக்கும்.