கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது.
இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு சேலம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. 300 தனியார் நிறுவனங்களில் காலியாகவுள்ள 40,000 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 8, 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, செவிலியர் என அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.