Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவத் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் ஒவ்வொருவருக்கும் ஒரு மருத்துவமனை என்ற அடிப்படையில் 200 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் ஏற்காடு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மருத்துவமனை இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories

Tech |