Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிஞ்சு காலுக்கு அறுவை சிகிச்சையா…..? “NEVER” 400 குழந்தைகளுக்கு மாற்று சிகிச்சை….. கோவை அரசு மருத்துவமனை சாதனை.!!

கோவை அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் எளிய முறையிலேயே சிகிச்சை ஒன்றை செய்து சாதனை படைத்துள்ளது. 

நம்நாட்டு சூழ்நிலையை பொருத்தவரையில், பணக்காரர்களை காட்டிலும், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் தான் அதிக அளவில் உள்ளனர். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர்கள் பணம் மட்டும் இருந்தால் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்வார்கள். காரணம் அங்குதான் அதிக அளவில் வசதிகள் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இருக்காது என்பதே.

ஆனால் இதை மாற்றும் வகையில் ஒருசில மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதில் இருக்கக்கூடிய இதுபோன்ற எண்ணங்களை மாற்றி வருகின்றது. அந்த வகையில், குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி வளைபாத குறைபாட்டை அறுவை சிகிச்சை இல்லாமல்,

எளிய முறையிலேயே கோவை அரசு மருத்துவமனை செய்து வருகிறது. இதுவரை 400 குழந்தைகளுக்கு மேல் அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் 45 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |