கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி ரானா உதவியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல நடிகை, நடிகர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் பெங்களூரு நாட்கள், காடன் உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார் ராணா. இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.
அந்த கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் அவர்களுக்கு தேவையான மளிகைப்பொருகள் மற்றும் மருந்துப் பொருள்களை அளித்து உதவி செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர்.