மதுப்பழக்கம், புகையிலை மற்றும் உடல் பருமன் ஆகிய காரணங்களால் புற்றுநோய் ஏற்பட்டு கடந்த 2019 ஆம் வருடத்தில் 40 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உலக நாடுகளில் இருக்கும் சுகாதார பிரச்சினைகளில் புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. 2019 ஆம் வருடத்தில் 40,45,000 மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.
மதுப்பழக்கம், புகையிலை, போதை பழக்கம் மற்றும் உடல் பருமன் போன்றவை தான் புற்றுநோய் ஏற்பட முக்கியமான காரணங்கள். உலகின் 5 பிராந்தியங்களில் புற்றுநோயால் உயிரிழப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது பற்றி வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவதுறையினுடைய இயக்குனராக இருக்கும் கிறிஸ்டோபர் முர்ரே தெரிவித்ததாவது, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் புகை பிடிப்பதால் தான் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக மதுப்பழக்கம் மற்றும் உடல் பருமன் போன்றவையும் காரணமாக இருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.