Categories
தேசிய செய்திகள்

40 நாள்….. ராமருக்கா ?…. பாபருக்கா ?… ”விசாரணை நிறைவு”…. 30 நாளில் தீர்ப்பு …..!!

அயோத்தி சர்சைக்கூறிய நிலம் தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கிய உச்சநீதிமன்றத்தின் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கு வழக்கின் விசாரணை அல்லது சரியாக 40 நாட்கள் தொடர் விசாரணையாகநடந்தது. பொதுவாக உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு_க்கு நீதிபதிகள் உட்கார்ந்தார்கள் என்றால் செவ்வாய் , புதன் , வியாழன் என 3 நாட்கள் தான் உட்காருவார்கள். ஆனால் இந்த வழக்கைப் பொருத்தவரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை என தொடர்ச்சியாக எந்த ஒரு வழக்கை எடுத்துக் கொள்ளாமல் அயோத்தி வழக்கை விசாரித்து வந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த கால வரலாறு , நிகழ்காலம் , எதிர் காலத்தில் என்ன நடக்கப்போகிறது ? என்று அனைத்து விஷயங்களையும் தனித்தனியாக இவர்கள் குறிப்பிட்ட அனைத்து தரப்பில் இருந்து தனித்தனியாக வாதங்களை ஆராய்ந்து இந்த வழக்கை விசாரித்தார்கள். இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமா ? அல்ல ஹிந்துக்களுக்கு சொந்தமா ? என வரலாற்றுத் தரவுகளை தோண்டி எடுத்து இந்த இரண்டு தரப்பினரும் கொடுத்திருக்கின்றனர்.

மேலும் இந்த இடத்தில் மசூதி இருந்ததா ? கோவில் இருந்ததா ? அங்கு எந்த மாதிரியான வழிபாடு நடத்தப்பட்டது. யாருக்கு சொந்தம் ? இதன் மூலம் யார் பலனடைய போகிறார்கள் ? என்று அனைத்து தரப்பிலும் விசாரணை முன்வைக்கப்பட்டது.மிக விரைவாக விசாரிக்கப்பட்டு தற்போது விசாரணை நிறைவடைந்திருக்கிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு முறையும் வழக்கறிஞ்சர்கள் கோபப்படும் போதெல்லாம் அதை கட்டுப்படுத்தி, எந்தவிதமான அசம்பாவித சம்பவம் ஏற்படாத வண்ணம் மிக தெளிவாக நேர்த்தியாக இந்த வழக்கின் விசாரணையை தற்போது நடத்தி முடித்திருக்கிறார்கள்.இன்னும் ஒரு மாதத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஏனென்றால் இந்த வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்னும் சரியாக ஒரு மாதத்தில் ஓய்வு பெறுகின்றார். நவம்பர் 18 ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் போதே  இந்த வழக்கில் தீர்ப்பு எழுதுவதற்கு ஒரு மாத காலமாவது எடுத்துக்கொள்ளும் , எனவே நாங்கள் முடிந்தவரை இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க முயற்சிக்கிறோம் என்று சொல்லியிருந்தார். அந்த வகையில் சரியாக ஒரு மாதத்திற்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வந்துவிடும் என்றும் எதிர் பார்க்கலாம். தற்போது எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.  ஒரு சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஒரு மதம் சார்ந்த விஷயமாகவும் இருக்க கூடிய சூழ்நிலையில் இந்தியாவின் மதச் சார்பின்மை, இந்தியாவின் ஸ்திரத் தன்மை ,  வேற்றுமையில் ஒற்றுமை அனைத்தையும் உள்வாங்கி மிக முக்கியமான தீர்ப்பு , எந்த தரப்பு எந்த தரப்பிற்கும் பாதகம் இல்லாமல் வரும் என்று எதிர்பார்க்கலாம். அதன் முன்னோட்டமாக ஏற்கனவே  சமரசக்குழு அரிக்கயில் முஸ்லிம் அமைப்பான சன்னி வக்பு வாரியம் ஆனது இந்துவும் கோவில் கட்டிக்க கொள்ளட்டும் , நாங்களும் மசூதி அமைத்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |