தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சமடைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை,கோவை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகமேடுத்துள்ளது.இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் இதனை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதித்தோரில் 40% மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்டவர்களின் 95 சதவீதம் பேர் வீட்டிலும் 5% பேர் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் கட்டுப்பாடு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.